பிர்மிங்காம்:72வது நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வெவ்வேறு எடை பிரிவுகளில் மல்யுத்த போட்டி நடைபெற்றது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட் நம்பிக்கை நட்சத்திரமான ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள பஜ்ரங் புனியா 65 கிலோ எடை பிரிவில் களமிறங்கினார். தனது முழு அனுபவத்தையும் , ஆக்ரோஷமான ஆட்டத்தையும் வெளிப்படுத்திய பஜ்ரங் புனியா , இறுதிப் போட்டியில் கனடா வீரர் மெக்நீலை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார்.
கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மயிரிழையில் பதக்கத்தை தவற விட்ட தீபக் புனியா 86 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கினார். இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் இமாமை எதிர்கொண்ட தீபக் புனியா 3க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வசப்படுத்தினார்.