தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ஆஸி.வீராங்கனை - கண்ணீர் மல்க பேட்டி! - எந்தவொரு அறிவிப்பு அப்போது வெளியிடப்படவில்லை

ஆஸ்திரேலியாவின் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் வீராங்கனையான ஷெய்னா ஜாக் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தினைப் பயன்படுத்தியதாக சர்வதேச போட்டிகளிலிருந்து நான்கு ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார், நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.

Banned swimmer Shayna Jac
Banned swimmer Shayna Jac

By

Published : Dec 16, 2019, 5:46 PM IST

Updated : Dec 16, 2019, 8:00 PM IST

ஆஸ்திரேலியாவின் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் வீராங்கனையாக வலம் வரும்பவர், 21வயதே ஆன ஷெய்னா ஜாக். இவர் கடந்த ஜூலை மாதம் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தினை பயன்படுத்தியதாக, சர்வதேச போட்டிகளிலிருந்து நான்கு ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இவர், ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், என் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றமானது என்னருகில் இருப்பவர்களினால் பின்னப்பட்டச் சதியாகும் எனத் தெரிவித்தார்.

மேலும், தான் வேண்டுமென்றே ஊக்கமருந்துகளை உபயோபிக்கவில்லை, ஜிம்மில் பயிற்சி பெறும் சிலர் இதனை உடல்வலி போக்கும் மருந்து என்று கூறியதாலேயே நான் இதனை உட்கொண்டேன். மேலும் உண்மை என்னவெனில், ஊக்கமருந்து சோதனை நடைபெறுவதற்கு முன் இரண்டு மாத காலம் நான் எந்த மருந்துகளையும் உட்கொள்ளவில்லை என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷெய்னா ஜாக் இந்த ஊக்கமருந்து பரிசோதனை காரணமாக இந்தாண்டு கொரியாவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கமுடியாமல் போனது. இவரின் நீக்கம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் அப்போது வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:' ஒவ்வொரு நாளும் நான் என்னை வளர்த்து வருகிறேன் ' - ரிஷப் பந்த்!

Last Updated : Dec 16, 2019, 8:00 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details