விளையாட்டில் சாதனை செய்த இந்திய வீரர், வீராங்கனைகளை கௌரவிக்கும்விதமாக மத்திய அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு அஸ்ஸாம் மாநிலம் சார்பாக ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமா தாஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹீமா தாஸ்! - ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமா தாஸ்
அஸ்ஸாம் மாநிலம் சார்பாக இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை ஹீமா தாஸ் மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
Assam govt nominates Hima for Khel Ratna, Lovlina for Arjuna
இதுகுறித்து அம்மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இயக்குநர் தர்மா கந்தா மிலி பேசுகையில், ''அஸ்ஸாம் மாநில விளையாட்டு அமைச்சகம் சார்பாக கேல் ரத்னா விருதுக்கு ஹீமா தாஸும், அர்ஜுனா விருதுக்கு குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினாவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.