2019ஆம் ஆண்டுக்கான ஆசிய ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதன் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஹாங்காங் வீரர் லியோவை எதிர்த்து இந்தியாவின் சவுரவ் கோஷல் விளையாடினார்.
இதில் 11-9, 11-2, 11-8 என்ற செட் கணக்கில் அபாரமாக வென்று இந்திய வீரர் சவுரவ் கோஷல் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இந்திய வீரர் சவுரவ் கோஷல் அதேபோல் மகளிர் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஹாங்காங்கின் ஆனி அவ்-ஐ எதிர்த்து இரண்டாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா மோதினார். தொடக்கத்திலிருந்தே அபாரமாக ஆடிய இந்திய வீராங்கனை ஜோஷ்னா, 11-2 என முதல் செட்டை கைப்பற்ற, பின்னர் சுதாரித்துக்கொண்ட ஆனி இரண்டாவது செட்டை 6-11 எனக் கைப்பற்றினார். இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது.
பின்னர் மூன்றாவது செட்டை 11-8 என ஜோஷ்னா கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற நான்காவது செட்டில் 11-6 என கைப்பற்றிய ஜோஷ்னா ஆசிய தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.