தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

Asian Games 2023: ஆடவருக்கான கபடியில் இந்திய அணி தங்கம்! நடப்பு சாம்பியன் ஈரானை ஊதித்தள்ளியது! - 19வது ஆசிய விளையாட்டு தொடர்

ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவருக்கான கபடி இறுதி போட்டியில் ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

India Kabaddi Team
India Kabaddi Team

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 3:38 PM IST

ஹாங்சோ: 19வது ஆசிய விளையாட்டு தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான கபடி இறுதி போட்டிக்கு இந்தியா - ஈரான் ஆகிய அணிகள் முன்னேறின. அதன்படி இறுதி போட்டி இன்று (அக். 10) நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 33-க்கு 29 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

முன்னதாக போட்டி நடைபெற்று கொண்டு இருக்கையில், போட்டி தீடீர் என நிறுத்தப்பட்டது. இதனால் அங்கி சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நடுவரின் முடிவுக்கு இரு அணிகளும் ஆட்சேபனை தெரிவித்ததால் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் போட்டி சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் சமரசம் ஆன நிலையில், போட்டியானது மீண்டும் தொடங்கப்பட்டது.

இரு அணிகளும் ஒன்று ஒன்று சளித்ததில்லை என்பது போல் கடைசி வரை போட்டியை வெல்வதற்கு போராடின. ஆனால் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 33-க்கு 29 என்ற புள்ளிகள் கணக்கில் நடப்பு சாம்பியனான ஈரான் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது. இந்த பதக்கத்தையும் சேர்த்து இந்திய அணி வென்ற 28வது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியா 28 தங்கம், 35 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தமாக 103 பதக்கங்களுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க:South Africa Vs Srilanka : டாஸ் வென்று இலங்கை பந்துவீச்சு தேர்வு!

ABOUT THE AUTHOR

...view details