தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்ற இந்தியா! - கவித் முரளி குமார்

கத்தார் : ஆசிய தடகள சாமிபியன்ஷிப் போட்டியின் 10 ஆயிரம் மீ மற்றும் 3 ஆயிரம் மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியா பதக்கம் வென்றள்ளது.

கவித் முரளி குமார்

By

Published : Apr 22, 2019, 5:23 PM IST

2019ஆம் ஆண்டுக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தாரின் தோகா நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 10 ஆயிரம் மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கவித் முரளி குமார் கலந்துகொண்டார்.

இதில் பந்தய தூரத்தை 28 நிமிடங்கள் 38 வினாடிகளில் 10 ஆயிரம் மீட்டர்களை கடந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இது இவருடைய மிகச்சிறந்த ஓட்டமாக பதிவாகியுள்ளது. முதல் இடத்தை பஹ்ரைனின் தாவித் 28 நிமிடங்கள் 26 வினாடிகளில் தங்கப் பதக்கத்தையும், அதே நாட்டின் ஹசன் சானி 28 நிமிடங்கள் 31 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.

கவித் முரளி குமார்

இதனையடுத்து 3,000 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அவினாஷ் சார்பில் கலந்துகொண்டு, பந்தய தூரத்தை எட்டு நிமிடங்கள் 30 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

மேலும், இவர் கலந்துகொண்ட முதல் சர்வதேச போட்டியிலேயே வெள்ளி பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details