தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை பாங்காக்கில் நடைபெற்றது. இதன் கடைசி நாளான இன்று நடைபெற்ற ஆடவர் 75 கிலோ எடைப்பிரிவுக்கான இறுதிப் போட்டியில், இந்திய வீரர் ஆசிஷ் குமார், தென் கொரியாவின் கிங் ஜின்ஜேவுடன் மோதினார். இதில், சிறப்பாக விளையாடிய ஆசிஷ் குமார் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று தங்கப்பதக்கத்தை வென்றார்.
குத்துச்சண்டை: இந்திய வீரருக்கு தங்கம் - Ashish Kumar bagged Gold Medal in Thailand
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை தொடரில், இந்திய வீரர் ஆசிஷ் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.

குத்துச்சண்டை: இந்திய வீரருக்கு தங்கம்
இந்தத் தொடரில் இந்திய நட்சத்திரங்களான நிக்கித் ஸரீன் (51 கிலோ எடைப்பிரிவு), தீபக் (49 கிலோ எடைப்பிரிவு), முகமது ஹசமுதீன் (56 கிலோ எடைப்பிரிவு), பிரிஜேஷ் யாதவ் (81 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தனர். இருந்தாலும், இவர்கள் நான்கு பேரும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். இதன்மூலம், இந்தியா இந்த தொடரில் ஒரு தங்கம், நான்கு வெள்ளி, மூன்று வெண்கலம் என எட்டு பதக்கங்களை வென்றுள்ளது.
Last Updated : Jul 27, 2019, 10:25 PM IST
TAGGED:
Ashish Kumar