மெல்போர்ன்: 2022ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று (ஜன. 29) மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. உள்ளூர் வீரரான ஆஸ்லி பார்ட்டி, அமெரிக்காவின் டேனியல்லே காலின்ஸ் உடன் மோதினார்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே பார்ட்டி ஆதிக்கம் செலுத்தி வந்தார். இதன்மூலம், பார்ட்டி 6-3, 7-6 (2) என்ற கணக்கில் நேர் செட்களை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
25 வயதான பார்ட்டி இந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் மூன்று ஆடுகளங்களிலும் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய சிறப்பை பெற்றுள்ளார். 2019 பிரஞ்சு ஓபனில் களிமண் ஆடுகளத்திலும், கடந்தாண்டு விம்பிள்டணில் புல்தரையிலும், தற்போது ஹார்ட் கோர்டிலும் வென்றுள்ளார்.
குறிப்பாக, 1978ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீராங்கனை கிறிஸ் ஓ நெய்ல் ஆஸ்திரேலிய கிராண்ட் ஸ்லாமை வென்ற பிறகு, 44 ஆண்டுகளுக்கு பின் பார்ட்டி இப்பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: AUS Open 2022: துள்ளிக் குதிக்கும் நடால்; பைனலுக்கு முன்னேற்றம்!