புனே:பிரபல வில்வித்தை வீராங்கனை ஹிமானி மாலிக் கோவிட்-19 பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு ராணுவ விளையாட்டு நிறுவன மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
முன்னதாக இந்நிறுவனத்தால் அனைத்து வீரர்களுக்கும் ஆர்.டி- பிசிஆர் சோதனை நடத்தப்பட்டன. இந்தச் சோதனையில் ஹிமானி மாலிக்குக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் வில்வித்தை அணியில் உள்ள அலுவலர் ஒருவருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து அங்கு சோதனைகள் நடத்தப்பட்டன. மேலும் அங்கு பயிற்சிகளும் அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1ஆம் தேதி என இரண்டு நாள்களுக்கு நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் மீண்டும் தொடங்கிய கரோனா தடுப்பு மருந்து சோதனை!