அல்கோர்: கத்தாரில் நடந்துவரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று (நவம்பர் 23) குரூப் எஃப் அணிகளான மொராக்கோ vs குரோஷியா இடையே போட்டி நடந்தது. இரு அணிகளின் வீரர்களும் எவ்வளவு போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் கிடைத்தன. இதனிடையே மொராக்கோவின் செலிம் அமல்லாவின் கையில் பந்து பட்டதால் குரோஷியாவுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் குரோஷியா கோல் அடிக்க தவறிவிட்டது.
உலகக் கோப்பை கால்பந்து: மொராக்கோ vs குரோஷியா போட்டி சமன் - மொராக்கோ vs குரோஷியா
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோ, குரோஷியா அணிகளுக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது.
2018ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குள் குரோஷியா அணி நுழைந்தது. இந்தாண்டு போட்டிக்குள் நுழைய வேண்டுமானால் நாக் அவுட் ஆட்டங்கள் தேவை. மொராக்கோவிற்கு வரும் போட்டிகள் முறையே பெல்ஜியம் மற்றும் கனடா உடன் நடக்கிறது. மேலும், குரூப் ஈ அணிகளான ஜெர்மனி மற்றும் ஜப்பான் இடையேயான போட்டி கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்துள்ளன.
இதையும் படிங்க:'மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ வெளியேற்றம்'