தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தெற்காசிய விளையாட்டுப்போட்டி: தங்கப் பதக்கத்தை வென்ற மற்றொரு தமிழ் மகள்! - மகளிர் 48 கிலோ எடை குத்துச்சண்டை பிரிவில்

காத்மண்டு: தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 48 கிலோ எடை குத்துச்சண்டை பிரிவில் தமிழ்நாட்டைச் சார்ந்த கலைவாணி தங்கம் வென்றுள்ளார்.

Another golden lion girl in India
Another golden lion girl in India

By

Published : Dec 9, 2019, 11:37 PM IST

நேபாளத்தில் 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பூடான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற 48 கிலோ பிரிவு மகளிர் குத்துச்சண்டை பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா சார்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைவாணி பங்கேற்றார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கலைவாணி தெற்காசிய குத்துசண்டை போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேபாள வீராங்கனையை வீழ்த்தி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற கலைவாணி

சென்னையைப் பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உடற்கல்வியியல் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐ லீக் : விமான நிலைய மூடல் காரணமாகப் போட்டிகள் மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details