தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#worldchampionship: 'ஒரே போட்டி...இரண்டு சாதனைகள்' - ஈட்டி எறிதலில் அசத்திய அன்னு ராணி! - firnt indian go on the final

தோஹா: இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

#Annu Rani

By

Published : Sep 30, 2019, 11:58 PM IST

உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் கத்தார் நாட்டின் தலைநகரமான தோஹா நகரில் நடைபெற்று வருகின்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர தடகள வீரரான அனு ராணி உலக சாம்பியஷிப் ஈட்டி எறிதல் பிரிவில் பங்குபெற்றார்.

இன்று நடைபெற்ற குரூப் ஏ பிரிவுக்கான தகுதிச்சுற்றில் அன்னுராணி முதல் வாய்ப்பில் 57.05 மீட்டர் தூரம் ஈட்டியை வீசினார். அதன் பின் தனது இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தி கொண்ட அவர் 62.43 மீட்டரில் ஈட்டியை எறிந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதன்பின் தனது மூன்றாவது வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திய ராணி 60.50 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் உலகச் சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.

மேலும் இவர் இன்று நடைபெற்ற இரண்டாவது வாய்ப்பில் 62.43 மீட்டர்களை வீசி, முந்தைய தேசிய சாதனையான 62.34 மீட்டர் என்ற தன்னுடைய சாதனையை தானே முறியடித்து புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: #IAAFDoha2019: உசைன் போல்ட்டின் சாதனையை தகர்த்த அமெரிக்க வீராங்கனை!

ABOUT THE AUTHOR

...view details