தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

குத்துச்சண்டை: அமித் பங்கல், சந்தீத் தங்கம் வென்று சாதனை! - Boxing

அலெக்சிஸ் வாஸ்டின் சா்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் அமித் பங்கல், சந்தீத் ஆகியோா் தங்கப்பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளனர்.

Amit Panghal, Sanjeet strike gold at French boxing tourney
Amit Panghal, Sanjeet strike gold at French boxing tourney

By

Published : Oct 31, 2020, 3:41 PM IST

பிரான்ஸின் நேன்ட்ஸ் நகரில் நடைபெற்ற அலெக்சிஸ் வாஸ்டின் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்தியா சார்பாக 52 கிலோ பிரிவில் அமித் பங்கலும், 91 கிலோ பிரிவில் சந்தீத்தும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

இதில் இன்று (அக்.31) நடைபெற்ற 52 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் அமித் பங்கல், அமெரிக்காவின் ரெனே ஆபிரகாமை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அமித் பங்கல் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் ஆபிரகாமை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற 91 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் சஞ்சீத், பிரெஞ்சு வீரர் சோஹேப் போஃபியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற முதல் சர்வதேச குத்துச்சண்டைத் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடர்: இந்தாண்டு டிஆர்பி எப்படி?

ABOUT THE AUTHOR

...view details