அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீராங்கனை டீஜா ஸ்டீவன்ஸ், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் ஏழாவது இடத்தைப் பிடித்தார். அதேபோல் 2017இல் லண்டனில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐந்தாவது இடத்தை பிடித்தார்.
இந்நிலையில், ஒரேகான் மற்றும் மேற்கு ஹாலிவுட்டில் கடந்த ஆண்டு தடகள ஒருமைப்பாடு பிரிவினர், இவரிடம் மூன்று முறை ஊக்க மருந்து பரிசோதனை மேற்கொள்ள இருந்தனர். ஆனால் மூன்று முறையும் இந்த பரிசோதனையில் பங்கேற்கவில்லை. மேலும் தான் எங்கிருக்கிறேன் என்ற தகவல்களையும் டீஜா ஸ்டீவன்ஸ் தெரிவிக்கவில்லை.