கனடாவின் லேக் லூயிஸ் பகுதியில் பெண்களுக்கான பனிச்சறுக்குப் போட்டி நடைபெற்றது. இதில் 19 வயதே ஆகும் அமெரிக்க வீராங்கனை ஏஜே ( A J) கலந்துகொண்டார்.
போட்டியின்போது மலையிலிருந்து மின்னல் வேகத்தில் கீழே சறுக்கி வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஏஜே பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து கீழே விழுந்தார். அதையடுத்து மருத்துவர்களால் அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. காயங்கள் அதிகமாக இருந்ததையடுத்து, உடனடியாக ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.