காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவர் துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர். இவர் போபாலில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவற்றுடன் டெல்லி விமான நிலையத்துக்குச் சென்றார்.
துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா எனக் கேட்டு ஏர் இந்தியா அலுவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அனுமதி பெற்றுள்ளதாக மனு பாக்கர் தெரிவித்தும், அவர் எடுத்துச் சென்ற பொருள்களின் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி, கூடுதல் கட்டணத்தை கேட்டு அவரை விமானத்தில் ஏற அலுவலர்கள் அனுமதிக்கவில்லை.
இதனால் மனு பாக்கர் பிரதமருக்கும், மத்திய அமைச்சர்களுக்கும் தகவல் தெரிவித்து முறையிட்டார். பின் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து, போபாலுக்கு விமானத்தில் செல்ல மனு பாக்கர் அனுமதிக்கப்பட்டார்.