இந்தியா அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு நடத்தப்படும் தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் 59ஆவது முறையாக ராஞ்சியில் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிப் போட்டியில் நட்சத்திர ஈட்டி எறிதல் வீராங்கனை அன்னு ராணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இவர் இறுதிப்போட்டியில் 58.60 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எய்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். மேலும் ஷர்மிளா குமாரி(53.28மீ) வெள்ளிப்பதக்கத்தையும், பூனம் ராணி(50.67மீ) வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
அன்னு ராணி இதற்கு முன் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிப்போட்டி வரை சென்று எட்டாமிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #worldchampionship: 'ஒரே போட்டி...இரண்டு சாதனைகள்' - ஈட்டி எறிதலில் அசத்திய அன்னு ராணி!