தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாற்றுத்திறனாளிக்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 350 பேர் பங்கேற்பு! - bagapattinam latest news

மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 350 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை

By

Published : Oct 11, 2019, 11:34 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம், ராஜீவ்காந்தி சிறப்பு சரக விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 2வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் இன்று முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில காது கேளாதோர் விளையாட்டு கழகம் மற்றும் நாகை மாவட்ட காது கேளாதோர் மாற்றுத்திறனாளிகள் நலசங்கம் சார்பில் தடகள போட்டிகள், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், ரிலே என பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சென்னை, தூத்துக்குடி, சேலம், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 350 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

மாற்றுத்திறனாளிக்களுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி

இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் முதல் 2 வீரர்கள் டிசம்பர் மாதம் கேரளாவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான போட்டியில் பங்கேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:வித்தைக்காரன்: ஸ்டண்ட் சில்வாவிடம் சிலம்பம் கற்கும் காமெடி நடிகர்!

ABOUT THE AUTHOR

...view details