ஆண்டின் முதல் சீசன் மல்யுத்த தொடரான வேர்ல்ட் ரேங்கிங் சீரிஸ் வருகிற மார்ச் மாதம் 10ஆம் தேதி முதல் இத்தாலியில் தொடங்கவுள்ளது. இதில் 32 நாடுகளைச் சேர்ந்த 300 மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இத்தொடருக்காக பஜ்ரங் புனியா, வினேஷ் போகாத், நரசிங் யாதவ் போன்ற நட்சத்திர மல்யுத்த வீரர்கள் அடங்கிய 30 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இன்று (பிப்.24) அறிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ள அணி (எடை பிரிவு)
மகளிர்:மீனாக்சி (50 கிலோ பிரிவு), வினேஷ் போகத் (53), நந்தினி பாஜிராவ் (53), அன்ஷு மாலிக் (57), சரிதா (59), சோனம் மாலிக் (62), சாக்ஷி மாலிக் (62), நிஷா (65), அனிதா (68), கிரண் (76).
ஆடவர்:ரவி தாஹியா (57), பஜ்ரங் புனியா (65), ரோஹித் (65), விஷால் காளிராமன் (70), நரசிங் யாதவ் (74), சந்தீப் சிங் (74), ராகுல் ரதி (79), தீபக் புனியா (86), பர்வீன் சஹார் (86), சத்யவார்ட் கடியன் (97), சுமித் குமார் (125).
கிரேக்கோ ரோமன் மல்யுத்தம்: அர்ஜூம் ஹலாகுர்கி (55), மனிஷ் (60), நீரஜ் (63), கௌரவ் துஹூன் (67), குல்தீப் மாலிக் (72), குர்ப்ரீத் சிங் (77), ஹர்ப்ரீத் சிங் (82), சுனில் குமார் (87).
இதையும் படிங்க:‘நரேந்திர மோடி விளையாட்டு அரங்கம்’ என்ற புதிய அடையாளத்தில் மொடீரா!