தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு சர்வதேச தடகள கவுன்சில் ஒப்புதல்! - ஒரேகான் உலக தடகள சாம்பியன்ஷிப்

2022ஆம் ஆண்டு ஒரேகான் மாகாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு சர்வதேச தடகள கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

2022 Athletics World C'ships q'fication window until June 26, 2022
2022 Athletics World C'ships q'fication window until June 26, 2022

By

Published : Dec 12, 2020, 11:02 PM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் 1983ஆம் ஆண்டு முதல் சர்வதேச தடகள கவுன்சிலால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2022ஆம் ஆண்டுகான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவிலுள்ள ஒரேகான் மாகாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது இத்தொடருக்கு சர்வதேச தடகள கவுன்சிலும் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் இத்தொடரிலிருந்து சாம்பியன்ஷிப் தொடரில் 20 கி.மீ மற்றும் 35 கி.மீ ஆகிய ஆண், பெண் மாரத்தான் போட்டிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

மேலும் சர்வதேச தடகள தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுபவர்கள் இத்தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவர். மேலும் 35 கி.மீ மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் நவ.20ஆம் தேதி முதல் தொடங்கி, 2022 மே 29ஆம் தேதியுடன் முடிவடையும்.

அதேபோல் 20 கி.மீ மாரத்தான் மற்றும் 10,000 மீட்டர்களுக்கான நடத்தல், ரிலே பிரிவுகளுக்கான தகுதிச்சுற்றுக்கள் டிச.27 முதல் தொடங்கி, 2022 ஜூன் 26ஆம் தேதியுடன் முடிவடையும் என்றும் சர்வதேச தடகள கவுன்சில் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:'உடற்தகுதியை மேம்படுத்துவதற்கான முயற்சியில் உள்ளோம்' - ஸ்ஜோர்ட் மரிஜ்னே

ABOUT THE AUTHOR

...view details