தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஊக்க மருந்து சர்ச்சை: லண்டன் ஒலிம்பிக் பதக்கங்களை இழந்த வீரர்கள்! - லண்டன் ஒலிம்பிக்

2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரின்போது ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ரோமானியாவின் இரண்டு பளுதூக்கும் வீரர்களின் பதக்கங்களை சர்வதேச ஒலிம்பிக்குழு திரும்பப்பெற்றுள்ளது.

2 weightlifters lose London Olympics medals for doping
2 weightlifters lose London Olympics medals for doping

By

Published : Nov 25, 2020, 9:40 PM IST

2012ஆம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின்போது, ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தி வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து சர்வதேச ஒலிம்பிக்குழுவின் ஊக்கமருந்து தடுப்புப் பிரிவு இவ்வழக்கை விசாரணை செய்துவருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியின்போது ஊக்கமருந்தைப் பயன்படுத்தி, பதக்கங்களை வென்ற ரோமானிய வீரர்களின் பதக்கங்களை சர்வதேச ஒலிம்பிக்குழு பறித்துள்ளது.

இது குறித்து ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2012 லண்டன் ஒலிம்பிக்கின் மகளிர் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ரோமானியாவின் ரோக்ஸானா கோகோஸ், ஆடவர் பளுதூக்குதல் பிரிவில் வெண்கலம் வென்ற ரஸ்வன் மார்ட்டின் ஆகியோர் ஊக்கமருந்தைப் பயன்படுத்தியது, அவர்களிடன் மேற்கொண்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக அவர்களது பதக்கங்கள் திரும்பப்பெறப்படுகின்றன. ரோமானியாவைச் சேர்ந்த மேலும் நான்கு பளுதூக்கும் வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளவும் ஐஓசி முடிவுசெய்துள்ளது” என்று தெரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவிற்கு நான்கு ஆண்டுகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடைவிதித்து சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது' - கே.எல். ராகுல்

ABOUT THE AUTHOR

...view details