தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் குறித்து நினைவுக்கூரும் சரத் கமல் - 2006 காமன்வெல்த் போட்டிகள்

14 ஆண்டுகளுக்கு முன்பு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருணத்தை இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுக்கூர்ந்துள்ளார்.

14 years of Sharath winning CWG gold, the paddler is nostalgic
14 years of Sharath winning CWG gold, the paddler is nostalgic

By

Published : Mar 26, 2020, 9:47 PM IST

இந்திய நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல். சென்னையைச் சேர்ந்த இவர் தனது சிறப்பான ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஏராளமான பதக்கங்களை வென்று கொடுத்துள்ளார். இந்த நிலையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (மார்ச் 26) இவர் காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

மெல்போர்னில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் வில்லியம் ஹென்செலை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

இந்த தருணம் குறித்து சரத் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், 2006 இதே நாளில் நான் இந்தியாவுக்காக டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் தங்கப் பதக்கம் வென்றேன். ஒரு விதமான பதற்றத்தால் இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முந்தைய நாளில், நான் தூங்காமல் இருந்தது எல்லாம் இப்போது நியாபகம் இருக்கிறது. இந்த தருணத்தை தற்போது நினைவுப்படுத்தி பார்ப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது என பதிவிட்டிருந்தார்.

இதையும் படிங்க:10 ஆண்டுகளுக்கு பின் பதக்கம் வென்ற ஷரத் கமல்!

ABOUT THE AUTHOR

...view details