கரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு சர்வதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணி, ஜெர்மனி அணியுடன் நான்கு போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரில் விளையாடிவருகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய அணி வீரர்கள் தங்களது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் நீலகண்ட சர்மா ஆட்டத்தின் 13ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடக்கி வைத்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஜெர்மனி அணியின் கான்ஸ்டான்டின் ஸ்டைப் 14ஆவது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தில் சமநிலையை உண்டாக்கினார்.
அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விவேக் சாகர் ஆட்டத்தின் 27ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.