தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாநில அளவிலான ஹாக்கி போட்டி - வாடிப்பட்டி அணி வெற்றி! - state level

மதுரை: வாடிப்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டியில் திண்டுக்கல் அணியை தோற்கடித்து வாடிப்பட்டி அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது.

வாடிப்பட்டி அணி வெற்றி

By

Published : May 14, 2019, 10:23 AM IST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆடவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விளையாட்டு போட்டிகள் சனி, ஞாயிறு என இரண்டு நாட்களாக நடைபெற்றது.

மாநில அளிவிலான ஹாக்கி போட்டி

இதில், மதுரை, திண்டுக்கல், கோவில்பட்டி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின.

இறுதியில் திண்டுக்கல் புஷ்பக ரம் அணி, வாடிப்பட்டி எவர்கிரேட் அணி மோதின. இதில், வாடிப்பட்டி எவர் கிரேட் அணி திண்டுக்கல் அணியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து முதல் பரிசான சுழற்கோப்பையையும், 15 ஆயிரம் ரொக்கத் தொகையையும் தட்டிச் சென்றது.

இரண்டாவது பரிசான 10 ஆயிரம் ரூபாய், கோப்பையை திண்டுக்கல் புஷ்பகரம் அணிக்கு வழங்கப்பட்டது. இந்தப் பரிசுகளை காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் குமார் வழங்கி வீரர்களை கவுரவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details