நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த ஐந்து நாட்களாக மாவட்ட அளவிலான பிரஹித் நினைவு ஹாக்கி போட்டிகள்நடைபெற்றன. இதில் 12 அணிகள் கலந்துகொண்டன. இதில் நெப்டியூன் அணியும் பேரட்டி அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
மாவட்ட அளவிலான ஹாக்கி: குன்னூர் பேரட்டி அணி சாம்பியன்! - நீலகிரி
நீலகிரி: குன்னூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பிரஜித் நினைவு ஹாக்கி போட்டியில் குன்னூர் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் 6-3 என்ற கோல் கணக்கில் நெப்டியூன் அணியை வீழ்த்தி பேரட்டி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. பட்டத்தை வென்ற பேரட்டி அணிக்கு குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் கோப்பையை வழங்கினார்.
இரண்டாம் இடம் பிடித்த நெப்டியூன் அணிக்கு நீல்கிரீஸ் அணியைச் சேர்ந்த சுரேஷ் குமார் கோப்பையை வழங்கினார். மேலும் மாவட்ட அளவிலான இந்த ஹாக்கி போட்டியில் கலந்துகொண்ட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.