2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் முனைப்பில், இந்திய மகளிர் அணி ஐந்து ஹாக்கி டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்திய நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கோலாலம்பூரில் நேற்று நடைபெற்றது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் பலனாக, இந்திய அணி வீராங்கனை நவ்ஜோத் 12ஆவது நிமிடத்தில் அணியின் முதல் கோல் அடித்தார். பின், 20ஆவது நிமிடத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை வந்தனா அணியின் இரண்டாவது கோல் அடிக்க, 29ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்நீத் கோல் அடித்ததால், முதல் பாதியில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்று இருந்தது.