தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நியூசி.க்கு எதிராக தொடர்ந்து 2ஆவது தோல்வியைச் சந்தித்த இந்தியா - ஹாக்கி

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வியடைந்தது.

second-consecutive-defeat-of-indian-eves-against-kiwis
second-consecutive-defeat-of-indian-eves-against-kiwis

By

Published : Jan 29, 2020, 2:50 PM IST

நியூசிலாந்துக்குப் பயணம்செய்துள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்து, கிரேட் பிரிட்டம் ஆகிய அணிகளுக்கு எதிரான ஹாக்கி போட்டிகளில் பங்கேற்று விளையாடிவருகிறது. இந்தப் பயணத்தின் முதல் போட்டியில் நியூசிலாந்து டெவலப்மண்ட் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

இதையடுத்து நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது.

இதன் முதல் பாதியின் இரண்டாவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை வீணடிக்க, அதையடுத்து நியூசிலாந்து அணிக்கு இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. அதில் இந்திய அணி வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்பட்டதால், நியூசிலாந்து கோல் அடிப்பது தடுக்கப்பட்டது.

பின்னர் நடந்த இரண்டாவது குவார்ட்டரில் இந்திய அணிக்கு மீண்டும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நியூசிலாந்து அணியின் தடுப்பாட்ட வீராங்கனைகள் கோல் அடிப்பதைத் தடுத்தனர். இதனால் கோல் ஏதுமின்றி 0-0 என்ற நிலையில் முதல் பாதி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து தொடங்கிய இரண்டாம் பாதியின் 37ஆவது நிமிடத்தில் நியூசிலாந்து அணியின் ஹோப் ரால்ப் முதல் கோலை அடித்து இந்திய வீராங்கனைகளுக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் மூன்றாவது குவார்ட்டரின் முடிவில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது.

பின்னர் நடந்த கடைசி குவார்ட்டரில் நியூசிலாந்து அணிக்கு கிடைத்த இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பிலும், இந்திய அணிக்கு கிடைத்த ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பிலும் கோல்கள் எதுவும் விழாததால் இறுதியாக நியூசிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணியை வீழ்த்தியது. இதையடுத்து பிப்.4ஆம் தேதி நடக்கவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி கிரேட் பிரட்டன் அணியை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க: நியூசிலாந்திடம் போராடி தோற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி!

ABOUT THE AUTHOR

...view details