தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மகளிர் ஹாக்கிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது - ராணி ராம்பால்

பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதை இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு கிடைத்த அங்கீகாரமாகப் பார்ப்பதாக கேப்டன் ராணி ராம்பால் தெரிவித்துள்ளார்.

recognition-for-womens-hockey-in-india-says-rani-on-padma-shri-award
recognition-for-womens-hockey-in-india-says-rani-on-padma-shri-award

By

Published : Jan 26, 2020, 8:54 PM IST

இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் முதன்முதலாக 2008ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஹாக்கி போட்டிகளில் விளையாடிவருகிறார். 2009ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வெல்வதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர்.

ராணி ராம்பால் சாதனைகள்
தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதினைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக ராணி ராம்பால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ''இந்த விருதுக்கு நான் தேர்வுசெய்யப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. நியூசிலாந்து தொடருக்காக ஆக்லாந்தில் பயிற்சி செய்துகொண்டிருக்கிறோம். இந்தச் செய்தியைக் கேட்டு நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

ராணி ராம்பால் ட்வீட்

எனக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதினை மகளிர் ஹாக்கி அணிக்கு கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். இன்னும் பல சாதனைகளை மகளிர் ஹாக்கி அணி படைக்கும் என நம்புகிறேன்'' எனப் பேசினார்.

இதையும் படிங்க: நியூசி. ஹாக்கி தொடருக்கு ராணி ராம்பால் கேப்டனாக நியமனம்

ABOUT THE AUTHOR

...view details