ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த தடகள வீரர்களுக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பட்டியலில் 25 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு, அதில் சிறந்தவர்களுக்கு விருது வழங்கப்படும். 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த தடகள விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பாலை இந்திய ஹாக்கி சம்மேளனம் பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் முகமது முஷ்டாக் அகமது பேசுகையில், ’2019ஆம் ஆண்டு உலக தடகள விளையாட்டு விருதுக்கு ராணி ராம்பால் பரிந்துரை செய்யப்பட்டதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவில் உள்ள பெண்களுக்கு மிகப்பெரிய முன்மாதிரியாகவும் விளங்குகிறார். அவர் இந்திய ஹாக்கிக்கு பெரும் பங்களித்துள்ளார். இதுபோன்ற பரிந்துரைகள் பெண்களை மேலும் சாதிப்பதற்கு ஊக்கப்படுத்தும்’ என்றார்.