டெல்லி:இந்திய ஹாக்கி விளையாட்டின் பிதாமகனான தயான் சந்தின் 116ஆவது பிறந்தநாள் இன்று (ஆக. 29) கொண்டாட்டப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், அவரது பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றுவார். இந்நிலையில், இன்று (ஆக. 29) நடைபெற்ற 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் மேஜர் தயான் சந்த் பிறந்த தினத்தைப் பற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.
’தயான் சந்த் மகிழ்ந்திருப்பார்’
அப்போது பேசிய அவர், "நான்கு தசாப்தங்களுக்கு (40 ஆண்டுகளுக்கு) பிறகு ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது. இந்தத் தருணத்தில் மறைந்த மேஜர் தயான் சந்த் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். இதுபோன்று விளையாட்டுகளில் நாம் தீராத வேட்கையோடு செயல்படுவதுதான் அவருக்கு நாம் அளிக்கும் சிறப்பான நினைவஞ்சலியாக இருக்கும்.