OlympicQualifiers: மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டத்தை வென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் ஹாக்கி இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர் கொண்டது. விறுவிறுப்பான இந்த போட்டியில் ஆரம்பம் முதலே நெதர்லாந்து அணி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது .
இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் ஹாக்கி போட்டிக்கான இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 6-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி, 2020 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதியடைந்துள்ளது.
மேலும் இத்தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கு தகுதியடையாமல் சொந்த ஊர் திரும்பியது. இதற்கு முன் பாகிஸ்தான் ஹாக்கி அணி 1960, 1968, 1984 ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கங்களை வென்றுள்ளது.
இதையும் படிங்க:ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு