தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

’இனிதான் எங்க ஆட்டமே தொடங்கபோகுது’ - ஜோயர்ட் - Olympic 2020

புபனேஸ்வர்: எங்களது முழுமையான பயிற்சிகள் இனிதான் தொடங்குவுள்ளன என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஜோயர்ட் தெரிவித்துள்ளார்.

our real preparation starts now: Indian Womens Hockey Coach Sjoerd

By

Published : Nov 3, 2019, 5:23 PM IST

36 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானில் நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாட இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் அமெரிக்காவிடம் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. இருப்பினும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் அமெரிக்காவை 5-1 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியிருந்ததால் 6-5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி ஒலிம்பிக்கில் விளையாட தகுதிபெற்றது. இதையடுத்து இந்திய மகளிர் அணி கேப்டன் ராணி ராம்பால், பயிற்சியாளர் ஜோயர்ட் ஆகிய இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஜோயர்ட், ”நான் ஏற்கனவே சொன்னதுபோல் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதே எங்கள் அணியின் மிகப்பெரிய கனவு. ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில், எங்களது பயிற்சிகளை இனிதான் தொடங்கவுள்ளோம்.

நேற்றைய போட்டியில் எங்கள் அணியின் முதல் பாதி ஆட்டம் எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. முதல் பாதியில் நிறைய தவறுகளை வீராங்கனைகள் செய்தாலும், பிற்பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அமெரிக்க வீராங்னைகளை கோல் அடிக்கவிடாமல் தடுத்தனர். ஒலிம்பிக் போட்டிகளில் 36 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்கிறோம். அதில் நிச்சயம் பதக்கத்தை வெல்வோம்” என்றார்.

இதையும் படிங்க: ஒலிம்பிக் தகுதிச்சுற்று: ரஷ்யாவுக்கு அதிர்ச்சியளித்த இந்திய ஹாக்கி அணி

ABOUT THE AUTHOR

...view details