கடந்த ஆண்டு ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை அணிகளுக்கான உலகக்கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றது. அதன்படி, ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற இந்தத் தொடரை பெல்ஜியம் அணி முதல்முறையாக வென்று அசத்தியது. இந்நிலையில், 2023இல் ஆடவர் மகளிர் அணிகளுக்கான அடுத்த உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதில், ஆடவர் பிரிவு உலகக்கோப்பை தொடரை மீண்டும் நடத்த இந்தியாவின் விண்ணப்பத்தை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ஏற்றுக்கொண்டது.
இரண்டாவது முறையாக ஒடிசாவில் உலகக்கோப்பை ஹாக்கி தொடர்! - ஹாக்கி உலகக்கோப்பை
2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெறவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நவின் பட்னாயக் ட்வீட் செய்துள்ளார்.
தற்போது இந்தத் தொடர் மீண்டும் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெறவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நவின் பட்னாயக் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். "எந்த ஒரு நாட்டிற்கும் உலகக்கோப்பை தொடர் நடத்துவது அரிதாகக் கிடைக்கூடிய கெளரவம். அந்தவகையில், ஒடிசாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக்கோப்பை ஹாக்கி தொடரை நடத்துவதில் பெருமையாக உள்ளது" என அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தத் தொடரானது 2023 ஜனவரி 13 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த முறை புவனேஷ்வரில் நடைபெற்ற உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.