#Johorcup: 21 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அணிகளுக்காக இடையில் நடைபெறும் சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை மலேசிய அணி எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மலேசிய அணி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் அந்த அணி தொடக்கத்திலேயே இரண்டு கோல்களை அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.
அதன்பின் நடைபெற்ற இரண்டாம் பாதியில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் பிரதாப் லக்ரா, ஆட்டத்தின் 19ஆவது மற்றும் 33ஆவது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் ஷிலானந்த் லக்ரா 39ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோலடிக்க, 3-2 என இந்திய அணி முன்னிலை பெற்றது.