தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தேசிய விளையாட்டு தினம்: ஹாக்கியின் 'காட்ஃபாதர்' தயான் சந்த்...!

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தயான் சந்த்தின் 115ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாளை மத்திய அரசு தேசிய விளையாட்டு தினமான கொண்டாடி வருகிறது.

By

Published : Aug 29, 2020, 5:29 PM IST

national-sports-day-godfather-of-hockey-dhyan-chand
national-sports-day-godfather-of-hockey-dhyan-chand

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தயான் சந்த்தின் 115ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்தநாளை மத்திய அரசு தேசிய விளையாட்டு தினமான கொண்டாடி வருகிறது. இது வாழ்க்கையில் விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு கூறும் விழிப்புணர்வு நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரசால் உலகம் முழுவதும் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், விளையாட்டு பற்றிய முக்கியத்துவமும் ஆரோக்கியத்தின் முக்கியத்துவமும் மக்களிடையே பெருகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கையில் தொடர்ந்து விளையாடி வருபவர்கள், மிகவும் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்கிறார்கள்.

தேசிய விளையாட்டு தினத்தன்று இந்திய விளையாட்டின் மேம்பாட்டுக்காக பங்களித்து வரும் வீரர்கள், பயிற்சியாளர்கள், தன்னார்வலர்கள், அமைப்புகள் ஆகியவற்றுக்கு குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படும்.

எப்போது, ஏன் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது?

இந்திய ஹாக்கியின் கடவுள் தயான் சந்த்தின் பிறந்தநாளை கெளரவிக்கும் விதமாக, அவரது பிறந்த நாளன்று தேசிய விளையாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது. ஹாக்கி ரசிகர்களால் "The Wizard" என அழைக்கப்படுபவர். களத்தில் இவரது கட்டுப்பாடு, புதிய யுக்தி, ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் திறன், கோல் அடிக்கும் திறன் என, தன் அனைத்து செயல்பாடுகளாலும் இந்திய ஹாக்கியை பன்மடங்கு உயரத்திற்கு கொண்டு சென்றவர் தயான் சந்த்.

இவரால் இந்திய ஹாக்கி அணி, கடந்த 1928, 1932, 1936 ஆகிய ஒலிம்பிக் தொடர்களில் மூன்று தங்கத்தைக் கைப்பற்றியது. தனது 22 வருட ஹாக்கி கேரியரில், 400க்கும் மேல் கோல்கள் அடித்துள்ளார். தேசிய விளையாட்டு தினத்தன்று இந்தியாவுக்காக விளையாட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகளும் வழங்கப்படும். அதேபோல் தேசிய விளையாட்டு தினத்தன்று விளையாட்டில் சாதித்த வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளும் வழங்கப்படும்.

தேசிய விளையாட்டுத் தினத்தன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சார்யா விருது, தயான் சந்த் விருது ஆகிய நான்கு விருதுகள் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.

மேஜர் தயான் சந்த்:

ஹாக்கி ஜாம்பவன் தயான் சந்த், கடந்த 1905ஆம் ஆண்டு ஆக.29ஆம் தேதி அலகாபாத்தில் பிறந்தார். இவர் தனது முதல் நிலை பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, 16ஆவது வயதிலேயே இந்திய ராணுவத்தின் சிப்பாயாகப் பணியாற்றினார். பிராமண ரெஜிமென்ட்டின் பணியாற்றிய தயான் சந்த், முதலில் ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.

அதன்பிறகு தயான் சந்தின் திறமையை சுபேதார்-மேஜர் பேல் திவாரி அடையாளம் கண்டு, அவருக்கான பயிற்சிகளை வழங்கினார். ஹாக்கி போட்டிகளில் தயான் சந்தின் அட்டகாசமான செயல்பாடுகளில், கடந்த 1927ஆம் ஆண்டு லான்ஸ் நாயக் ஆக நியமிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து, இந்திய அணியின் கேப்டனான பின், கடந்த 1936ஆம் ஆண்டு சுபிதாராக நியமனம் செய்யப்பட்டார்.

பின்னர் லியூடனண்ட், கேப்டன் என பதவி உயர்வு பெற்று இறுதியாக மேஜர் என்று பதவிப்பெற்றார். ஹாக்கி ஆட்டத்தைப் பொறுத்தவரை தனது கைகளுக்கு பந்து வந்தால், நிச்சயம் கோல் அடித்த பின்னர் தான் பந்து வெளியேறும் என்று கூறும் அளவிற்கு திறமையானவர். இதன் காரணமாகவே ஒருமுறை ஹாக்கி பேட்டில் காந்தம் எதும் வைத்துள்ளாரா என்று இவரின் பேட் உடைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.

ஒலிம்பிக்கில் மூன்று முறை தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றவர். அதிலும், கடந்த 1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்கில் கேப்டனாக செயல்பட்டவர். சர்வதேச ஹாக்கியில் 400 கோல்களையும், மொத்த கேரியரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்கள் அடித்தவராவர்.

தேசிய விளையாட்டு தினத்தின் வரலாறு:

இந்த நாளில் தேசிய அளவில் விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இந்தியா சர்வதேச விளையாட்டில் செய்த சாதனைகளை நினைவுக் கூறும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. அதில் சுதந்திரத்திற்கு முன்னதாக இந்திய ஹாக்கி அணி செய்த சாதனைகள் நினைவு கூறப்படும். அதில் முக்கியமானவர் தயான் சந்த்.

ராணுவத்தில் இருந்த தயான் சந்த் சிங், பயிற்சியாளர் பங்கஜ் குப்தாவால் ஹாக்கியைக் கற்றுக்கொண்டார். ஹாக்கியின் நுணுக்கங்களை வேகமாகக் கற்றுக்கொண்ட தயான் சந்த், இந்திய கேப்டனாகவும் செயல்பட்டார்.

  • இவர் இந்திய விளையாட்டில் செய்த சாதனைகளுக்காகவும், மற்றவர்களுக்கு ஏற்படுத்திய ஊக்கத்திற்காகவும் அவரது பெயரில் தயான் சந்த் விருது குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டு வருகிறது.
  • இந்திய அஞ்சல் துறையின் சார்பாக இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டு கவுரவம் செய்தது.
  • அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, டெல்லியின் தேசிய மைதானத்திற்கு மேஜர் தியான் சந்த் என்று மறுபெயரிடப்பட்டது.
  • இவரது பிறந்த நாள் அன்று, கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் கேல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.
  • கடந்த 2019ஆம் ஆண்டு இவரது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, ஃபிட் இந்தியா மூவ்மெண்ட் என்ற பரபரப்புரை மேற்கொண்டார்.

கரோனா சூழலால் தேசிய விளையாட்டு தினத்தன்று வழங்கப்படவுள்ள விருது பெறுபவர்களின் பட்டியல் தாமதமானது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு விருதுகளுக்கான பரிந்துரை வரவேற்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பரிந்துரை பட்டியல் வழங்குவதற்காக காலக்கெடு அதிகமாக வழங்கப்பட்டது.

கரோனா வைரசால் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதனிடையே மத்திய அரசின் விருது பட்டியல் சில நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இன்று(ஆக.29) இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தேசிய விளையாட்டு தினம்: தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

ABOUT THE AUTHOR

...view details