பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியலாவைச் சேர்ந்த ஹாக்கி வீரர் அம்ரிக் சிங், தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக விளையாடிவந்தார் அதேபோல் இவரது சக நண்பரான சிம்ரன்ஜித் சிங் பஞ்சாப் அணிக்காக வாலிபால் போட்டிகளில் விளையாடிவந்தார். இருவரும் பட்டியாலாவில் உள்ள பஞ்சாப் மாநில மின்நிலையத்தில் (Punjab State Power Corporation Ltd) பணிபுரிந்துவந்தனர்.
இந்நிலையில், நேற்று இரவு அம்ரிக் சிங், சிம்ரன்ஜித் சிங், மனோஜ் குமார் உள்பட சக வீரர்கள் ஐந்து பேர் பர்தாப் நகரில் உள்ள தாபா உணவத்துக்கு மது அருந்தச் சென்றுள்ளனர். அப்போது நடந்த தகராறில் அம்ரிக் சிங், சிம்ரன்ஜித் சிங் இருவரும் மனோஜ் குமார் மற்றும் அவரது மகனை மூர்க்கமாக தாக்கியுள்ளனர்.