தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வளர்ந்துவரும் நட்சத்திரமாக தேர்வான இந்திய ஹாக்கி வீராங்கனை - இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை லால்ரேம்சியாமி

லுசானே: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் 2019ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் நட்சத்திர வீராங்கனையாக இந்திய மகளிர் ஹாக்கி அணியின் லால்ரேம்சியாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Lalremsiami, FIH Womens Rising Star
Lalremsiami

By

Published : Feb 11, 2020, 6:31 PM IST

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் வீரர், வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் இன்று அறிவிக்கப்பட்டது.

லால்ரேம்சியாமி

இதில் 2019ஆம் ஆண்டின் வளர்ந்துவரும் வீராங்கனையாக இந்தியாவின் இளம் வீராங்கனை லால்ரேம்சியாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2018ஆம் ஆண்டில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் அறிமுகமான இவர், தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை அளித்துவருகிறார். 2018இல் ஜப்பானில் நடைபெற்ற ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

லால்ரேம்சியாமி

மேலும், இந்தாண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தேர்வாகவும் லால்ரேம்சியாமி முக்கிய காரணமாக திகழ்ந்தார். தற்போது 19 வயதாகும் லால்ரேம்சியாமி, இந்திய அணியின் சிறப்பான ஸ்ட்ரைக்கர் வீராங்கனையாக உள்ளார்.

லால்ரேம்சியாமி

இந்த விருதுக்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 40 விழுக்காடு வாக்குப்பதிவை பெற்று, லால்ரேம்சியாமி வளர்ந்துவரும் வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்ட வீடியோவில், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தனது அணியைச் சேர்ந்த இளம் வீராங்கனையான லால்ரேம்சியாமி குறித்த செய்தியை வெளியிட்டார்.

மற்றொரு வீடியோவில் தோன்றிய லால், நான் இந்த விருதை வெல்வேன் என்று நினைக்கவில்லை. ஆனால் தற்போது இதை வென்றிருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் கடந்தாண்டு விளையாடியதை எண்ணியும் எங்கள் அணி ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியிருப்பதை எண்ணியும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த விருதை எனது அணியினருக்கு சமர்பிக்கிறேன் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details