தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சர்வதேச ஹாக்கி நட்சத்திர விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதில் பெருமை - இந்திய வீராங்கனை

இந்திய இளம் ஹாக்கி வீராங்கனை லால்ரேம்சியாமியின் பெயர், 2019 ஆண்டுக்கான சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நட்சத்திர விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

லால்ரேம்சியாமி, Lalremsiami
லால்ரேம்சியாமி, Lalremsiami

By

Published : Dec 21, 2019, 3:13 PM IST

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் எஃப்.ஐ.ஹெச் ஹாக்கி நட்சத்திரங்கள் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவதுண்டு. அந்த வகையில் இந்த வருடத்திற்கான நட்சத்திர விருதுக்காக இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை லால்ரேம்சியாமியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

லால்ரேம்சியாமி

19 வயதே ஆனா லால்ரேம்சியாமி கடந்தாண்டு இந்திய சீனியர் மகளிர் ஹாக்கி அணியில் அறிமுகமானார். அப்போது முதல் இந்திய அணியில் முக்கிய பங்காற்றிவரும் இவர் சிறந்த ஸ்ட்ரைக்கராக உள்ளார். 2019ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக பத்து கோல்களை அடித்துள்ள லால்ரேம்சியாமி, ஹிரோசிமாவில் நடைபெற்ற எஃப்ஐஹெச் மகளிர் இறுதிப்போட்டியிலும், ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியிலும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

எஃப்ஐஹெச் மகளிர் தொடரில் இந்திய அணி பங்கேற்றிருந்த சமயத்தில் லால்ரேம்சியாமியின் தந்தை மரணமடைந்தார். இருப்பினும் தனது தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் அவர் அந்தத் தொடரில் தொடர்ந்து விளையாடினார். பின்னர் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஜப்பானை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.

லால்ரேசியாமின் இந்த செயல் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. அதன்பின் வரலாற்றில் முதன்முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிப் பெற்றுள்ளது.

தான் எஃப்.ஐ.ஹெச் ஹாக்கி நட்சத்திர விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறித்து பேசிய லால்ரேம்சியாமி, இந்த வருடம் தனக்கு மகிழ்ச்சி, கஷ்டம் ஆகிய இரண்டும் கலந்த ஆண்டாக இருந்தது. ஏனெனில் நான் எனது தந்தையை முக்கியமான ஒரு தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது இழந்தேன். எனினும் இந்திய அணியில் இருப்பது மகிழ்ச்சியாக கருதுகிறேன், என்னுடைய கடினமாக சூழல்களில் அவர்கள் எனக்கு உறுதுணையாக உள்ளனர்.

லால்ரேம்சியாமி

இது போன்ற ஒரு விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் சமயத்தில் களத்திலும், களத்திற்கு வெளியேவும் எடுத்த முயற்சிகளை நாம் நினைத்து பார்ப்போம். நான் இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் அணி இந்த வருடம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஹாக்கி என்பது ஒரு குழு விளையாட்டு. இதில் முன்வரிசை வீராங்கனையான எனக்கு கோல் போடுவது மட்டுமின்றி பிற கடமைகளும் உள்ளது. நான் எனது அணிக்கு பல வழிகளில் பங்களிக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த ராணி, வந்தனா, நவ்ஜோத், சுஷிலா ஆகியோருடன் விளையாடுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். என்னை சிறந்த வீராங்கனையாக மாற்றிய எனது அணியினருக்கு நன்றி. அடுத்த வருடம் எங்களுக்கு மிக முக்கியமான வருடம். நாங்கள் ஒலிம்பிக்கில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.

முன்னதாக இம்மாதத்தின் தொடக்கத்தில், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்ட சிறந்த வீரர் வீராங்கனைகள் பரிந்துரை பட்டியலில், இந்திய ஆடவர் ஹாக்கி வீரர் மான்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத் ஆகியோரின் பெயர் இடம்பெற்றிருந்தது.

ABOUT THE AUTHOR

...view details