2015ஆம் ஆண்டு முதல் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய ரோலண்ட் ஓல்ட்மன்ஸ், 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, ஹரேந்திர சிங் பயிற்சியாளராக இருந்தார். அவர் ஜூனியர் பயிற்சியாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டதையடுத்து, இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான தேடுதல் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் இந்திய ஹாக்கி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கிரஹாம் ரீட்(54) நியமிக்கப்பட்டிருப்பதாக இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இவர் பற்றிய சில குறிப்புகள் :
* 1992ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய ஹாக்கி அணியில் விளையாடியுள்ளார். மேலும், 1984,1985,1989,1990 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.