கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இம்மாதத்தில் மட்டும் பல்வேறு வகையான விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது லண்டனில் நடைபெறவிருந்த புரோ லீக் ஹாக்கி தொடர்களையும் ஒத்திவைப்பதாக, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து எஃப்.ஐ.ஹெச். வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 பெருந்தொற்றின் சமீபத்திய செய்திகள் அடிப்படையிலும், உலக சுகாதார மையத்தின் அறிவுரைப்படியும் எஃப்.ஐ.ஹெச்.இன் புரோ ஹாக்கி லீக் தொடர் வருகிற மே 17ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கோவிட் -19 பெருந்தொற்றின் விளைவாக அனைத்துப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் எஃப்.ஐ.ஹெச்., உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைப்படி அனைத்தையும் கண்காணித்துவருவதாகக் குறிப்பிட்டுள்ளது.