ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடருக்கான ஹாக்கி தகுதிச்சுற்று போட்டிகள் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, அமெரிக்க மகளிர் அணியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய அமெரிக்க அணி ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிராடியாக விளையாடி கோல்களை அடித்தது. இதன் மூலம் அமெரிக்க அணி 4-1 என்ற கோல்கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.