கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டாக எந்தவித சர்வதேச போட்டிகளிலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்காமல் இருந்தது. பின்னர் வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு அரசு அனுமதியளித்ததைத் தொடர்ந்து, பெங்களூருவிலுள்ள தேசிய விளையாட்டு பயிற்சி பள்ளியில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
மேலும் இந்தாண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை கருத்தில் கொண்டு, இந்த அணி சர்வதேச சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. அதன்படி அர்ஜென்டினா சென்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, அந்நாட்டின் ஜூனியர் அணிகளுடன் விளையாடி வருகிறது.
இதில் நேற்று (ஜன.18) நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளும் வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஆட்டத்தின் 22ஆவது நிமிடத்தில் இந்திய அணியின் ஷர்மிளா தேவி கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.