தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹாக்கி: இந்தியா- மலேசியா இன்று பலப்பரீட்சை - India v Malaysia Womens Hockey

கோலாலம்பூர்: இந்தியா- மலேசியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஹாக்கி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியா - மலேசியா இன்று பலப்பரீட்சை

By

Published : Apr 6, 2019, 11:55 AM IST

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், இந்திய மகளிர் அணி ஐந்து ஹாக்கி டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற ஹாக்கி டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் வந்தனா கட்டாரியா இரண்டு கோல், லால்ரேசியாமி ஒரு கோல் அடித்தனர்.

இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஹாக்கி டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு இன்று தொடங்குகிறது. இந்திய அணியின் ஆதிக்கம் இப்போட்டியிலும் தொடருமா என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். மறுமுனையில், மலேசிய அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்ததற்கு இன்றையப் போட்டியில் பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் அவர்களது ரசிகர்கள் உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details