நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2016இல் ரியோ டிஜெனிரோவில் நடைபெற்றப் பின் அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது ஒலிம்பிக் போட்டி ஜூலை 24ஆம் தேதி ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 12 அணிகள் தற்போது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,குரூப் ஏ:நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய அணிகளுடன் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
குரூப் பி: பெல்ஜியம், நெதர்லாந்து, கனடா, ஜெர்மனி, கிரேட் பிரட்டன், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல், மகளிர் பிரிவிலும் இந்திய அணி நடப்பு சாம்பியன் கிரேட் பிரிட்டன், அயர்லாந்து, ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, சீனா, நியூசிலாந்து, ஜப்பான் அணிகள் உள்ளன.
இந்தத் தொடரில் ஹாக்கி போட்டிகள் ஜூலை 25ஆம் தேதி ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான அட்டவனை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.