2003ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட எஃப்ஐஹெச் உலக ஹாக்கி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதல்முறையாக நான்காவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
தரவரிசையில் மாஸ் காட்டிய இந்திய ஹாக்கி அணி சமீபத்தில் நடந்த எஃப்ஐஹெச் ப்ரோ ஹாக்கி லீக் தொடரின் முதல் மூன்று சுற்று ஆட்டங்களில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டதன் விளைவே இந்திய அணியின் தரவரிசை முன்னேற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இந்தத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் பெல்ஜியம் அணியும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தில் நெதர்லாந்து அணியும், நான்காவது இடத்தில் இந்திய அணியும் இடம்பிடித்துள்ளன. முக்கியமாக கடந்த ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்ற அர்ஜெண்டினா அணியை இந்திய அணி பின்னுக்குத் தள்ளியுள்ளது. அர்ஜெண்டினா அணி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
முதல்முறையாக தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:பெனால்டி ஷூட் அவுட்டில் த்ரில் வெற்றிபெற்ற இந்தியா!