தமிழ்நாடு

tamil nadu

மீண்டும் பயிற்சிக்கு திரும்பும் இந்திய ஹாக்கி அணி!

By

Published : Jan 2, 2021, 8:56 PM IST

மூன்று வார இடைவெளிக்குப் பின் மீண்டும் பெங்களூருவிலுள்ள தேசிய விளையாட்டு பயிற்சி முகாமில் 33 பேர் கொண்ட இந்திய ஆடவர் ஹாக்கி அணி பயிற்சி மேற்கொள்ளவுள்ளது.

Indian men's hockey camp to begin from January 5
Indian men's hockey camp to begin from January 5

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். பின் கடந்த ஆகஸ்ட் மாதம் வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய விளையாட்டு பயிற்சி முகாமில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து ஆகஸ்ட் முதல் டிசம்பர் மாதம் வரை பயிற்சி மேற்கொண்ட இந்திய ஹாக்கி அணி வீரர்கள், டிசம்பர் 12ஆம் தேதி தங்களது பயிற்சி காலத்தை நிறைவு செய்தனர். அதன் பிறகு, அவர்களுக்கு மூன்று வாரம் ஓய்வளிக்கப்பட்டது.

தற்போது ஹாக்கி வீரர்களின் மூன்று வார ஓய்வுக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஜனவரி 5ஆம் தேதி முதல் 33 பேர் அடங்கிய இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர் பெங்களூருவிலுள்ள தேசிய விளையாட்டு பயிற்சி மையத்தில் தங்களது பயிற்சியைத் தொடரவுள்ளனர். அதன்படி பயிற்சி மேற்கொள்ளவுள்ள வீரர்களின் விவரம் பின்வருமாறு:-

கோல் கீப்பர்கள்: ஸ்ரீஜேஷ், கிருஷ்ணா பி. பதக், சூரஜ் கர்க்ரா.

டிஃபென்டர்ஸ்: பிரேந்திர லக்ரா, ரூபீந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், கோத்தாஜித் சிங் , ஹர்மன்பிரீத் சிங், குரிந்தர் சிங், ஜர்மன்பிரீத் சிங், வருண் குமார், டிப்சன் டிர்கி, நிலம் சஞ்சீப்.

மிட் ஃபீல்டர்ஸ்: மன்பிரீத் சிங், சிங்லென்சனா சிங், நிலகண்ட சர்மா, சுமித், ஜஸ்கரன் சிங், ராஜ்குமார் பால், ஹார்திக் சிங், விவேக் சாகர் பிரசாத்.

ஸ்டிரைக்கர்ஸ்: எஸ்.வி.சுனில், ஆகாஷ்தீப் சிங், மந்தீப் சிங், லலித் உபாத்யாய், ராமன்தீப் சிங், சிம்ரஞ்சீத் சிங், ஷம்ஷர் சிங், குர்ஜாந்த் சிங், தில்பிரீத் சிங், குர்சாஹிப்ஜித் சிங், ஷிலானந்த் லக்ரா.

இதையும் படிங்க: சயீத் முஷ்டாக் அலி: மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர்!

ABOUT THE AUTHOR

...view details