தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முத்தரப்பு தொடரில் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய ஜூனியர் ஹாக்கி அணி! - நியூசிலாந்து அணி தொடரில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது

இந்தியா - நியூசிலாந்து - ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் ஜூனியர் ஹாக்கி முத்தரப்பு தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

Indian Jr Women's
Indian Jr Women's

By

Published : Dec 8, 2019, 6:08 PM IST

ஆஸ்திரேலியாவில், இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்த மகளிர் ஜூனியர் ஹாக்கி அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஹாக்கித் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

அதன் பின் நடைபெற்ற போட்டிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி, நேற்று நியூசிலாந்து அணியுடனான போட்டியை 4-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது.

மேலும் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் ஆஸ்திரேலிய அணியுடன் மோதிய இந்திய அணி, 2-1 என்ற கோல் கணக்கில் மீண்டும் தோல்வியடைந்தது.

இதன் மூலம் மூன்று நாடுகள் பங்கேற்ற ஹாக்கித் தொடரில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் ஏழு புள்ளிகளுடன் சமநிலையைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து கோல் கணக்கு அடிப்படையில் இந்திய மகளிர் ஜூனியர் ஹாக்கி அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.

இத்தொடரில் ஆறுப்புள்ளிகளை பெற்றிருந்த நியூசிலாந்து அணி தொடரில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

இதையும் படிங்க: நியூசிலாந்திடம் மாஸ் கம்பேக் தந்த இந்திய மகளிர் அணி!

ABOUT THE AUTHOR

...view details