28ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடர் மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி போலந்து அணியுடன் மோதியது.
முதல் நிமிடம் முதல் கடைசி நிமிடம் வரை கோல்; போலந்தை பொளந்துக்கட்டிய இந்தியா! - இந்தியா
இபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 10-0 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது.
10-0 என்ற கோல் கணக்கில் பொலாந்தை வீழ்த்திய இந்தியா
இந்திய அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதால், போலந்து அணியுடனான ஆட்டம் அவர்களுக்கு நல்ல பயிற்சியாகவே இருந்ததது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் நிமிடத்தில் கோல் அடித்து மிரட்டியது. இதைத்தொடர்ந்து போட்டி முழுவதும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
அடுத்ததடுத்து நிமிடங்களில் வரிசையாக கோல்மழை பொழிந்தனர். இறுதியில் இந்திய அணி 10-0 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தியது.