தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹாக்கி: ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்தியா! - India v Spain

ஸ்பெயின் அணிக்கு எதிரான மூன்றாவது ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

India

By

Published : Sep 30, 2019, 8:44 AM IST

இந்திய ஹாக்கி அணி, பெல்ஜியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பெல்ஜியம், ஸ்பெயின் இரண்டு அணிகளை எதிர்த்து விளையாடிவருகிறது. இதில், பெல்ஜியம் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 2-0 என்ற கணக்கிலும் ஸ்பெயின் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மீண்டும் இந்திய அணி ஸ்பெயினுடன் மோதியது.

கோல் அடித்த சந்தோஷத்தில் ஹர்மன்ப்ரீத் சிங்

முதலிரண்டு போட்டிகள் போல் இல்லாமல் இப்போட்டியில் இந்திய அணி சற்று மோசமாகவே ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டம் தொடங்கியவுடன் அட்டாக்கிங் முறையில் விளையாண்ட ஸ்பெயின் அணி மூன்றாவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. இதையடுத்து, அவர்களது கொண்டாட்டம் முடிவதற்குள் இந்திய வீரர் அகாஷ்தீப் சிங் பதிலுக்கு கோல் அடிக்க, ஐந்தாவது நிமிடமே ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சூடுபிடிக்கத் தொடங்கியது.

கோலடித்த மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள்

இதன்பின், மீண்டும் ஆட்டத்தில் பந்தை அதிகம் பாஸ் செய்து விளையாடிய இந்திய அணி 20ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தது. இம்முறை இந்திய அணி சார்பில் சி.வி. சுனில் அற்புதமான கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இரண்டாம் பாதி தொடங்கியவுடன் இந்திய வீரர் ராமன்தீப் சிங் கோல் அடித்ததால், மீண்டும் இந்திய அணி இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

கோல் அடித்த சந்தோஷத்தில் ஹர்மன்ப்ரீத் சிங்

பின்னர், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் தன் பங்கிற்கு 41, 51ஆவது நிமிடத்தில் கோல் அடித்து கலக்கினார். இதனால், இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்று இந்தத் தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள இந்தத் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

ABOUT THE AUTHOR

...view details