#Johorcup: 21 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அணிகளுக்கு இடையில் நடைபெறும் சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கித் தொடர் மலேசியாவின் ஜோஹர் பஹ்ரு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா அண்டர் 21 அணி ஆஸ்திரேலியா அண்டர் 21 அணியை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்திலேயே கோல் அடித்து அதிர்ச்சியளித்தது.
அதன் பின் ஆட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் ஷிலனந்த் லக்ரா ஆட்டத்தின் 26 மற்றும் 29ஆவது நிமிடத்தில் தொடர்ந்து இரு கோல்களை அடித்து அசத்தினார்.
அவரைத் தொடந்து 44ஆவது நிமிடத்தில் தில்ப்ரீட் சிங் கோலடித்து வெறித்தனம் காட்டினார். அதன் பின்னர் இந்திய அணியின்
குர்சாஹிப்ஜித் சிங் 48ஆவது நிமிடத்திலும், மந்தீப் மோர் 50ஆவது நிமிடத்திலும் கோலடித்து ஆஸ்திரேலிய அணியின் டிஃபென்ஸை கேள்விக்குள்ளாக்கினர்.
இறுதி வரை போராடிய ஆஸ்திரேலிய அணியால் ஒரு கோலை மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரின் நான்காவது லீக் போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணியை பதம்பார்த்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா அண்டர் 21 ஹாக்கி அணி சுல்தான் ஆஃப் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரில் மூன்று வெற்றிகளை பெற்று கிட்டத்தட்ட இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:#Johorcup: 'எங்க ஆட்டம் வெறித்தனம் தான்' - நியூசிலாந்தை திணறடித்த இந்தியா!